சிற்பிகள் IAS அகாடெமி 2015 ஆம் ஆண்டு கல்வி சேவைக்காக தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம்.இந்த அமைப்பின் வழியாக ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் பலவிதமான மாற்றங்களை நாங்கள் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். கல்வியால் மட்டுமே ஒரு தனி மனிதனையும், சமூகத்தையும், நாட்டையும் மாற்றவும், முன்னேற்ற முடியும். நாம் வாழும் வாழ்வில் நலமும், வளமும் இருக்க வேண்டுமென்றால் அதற்கான அடித்தளம் கல்வி.
கல்வி என்பது ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. நம் பயிற்சி மையத்தின் வழியாக ஆதரவற்ற தாய், தந்தை இறந்த முதல் தலைமுறை மாணவ மாணவிகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்கான வழிகளை போதித்து, அவர்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நல்லதொரு துவக்கத்தை நாங்கள் துவங்கியுள்ளோம்.
பள்ளிப் படிப்பிலிருந்து போட்டித்தேர்வு வரை மாணவ மாணவிகளை வழிநடத்தவும், அவர்களுக்கான பயிற்சி அளிக்கவும் ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான் சிற்பிகள் IAS அகாடெமி. அது மட்டும் இல்லாமல் படிக்க வேண்டும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் மாணவ-மாணவிகள் யாராக இருந்தாலும் அவர்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்கான வழிகளையும், வாய்ப்புகளையும் நாங்கள் உருவாக்கி தந்து கொண்டிருக்கின்றோம்.
2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு வழியாக இதுவரை எண்ணற்ற மாணவ மாணவிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான விதைகளை நாம் வைத்துள்ளோம். இணையவழி வகுப்பு வழியாகவும் நேரடி வகுப்பு வழியாகவும் இது வரை எண்ணற்ற மாணவ-மாணவிகள் எங்களுடன் இணைந்து தங்கள் வாழ்க்கைக்கு தேவையான அடித்தளத்தை அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்று அய்யன் திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றம் நம் மனதில் புரிந்துள்ள எண்ணங்களின் தொகுப்பை சார்ந்தே அமையும்.
அதற்காகவே ஊக்கம் தரக்கூடிய, உற்சாகம் தரக்கூடிய வார்த்தைகளையும், சிந்தனைகளையும், எண்ணங்களையும் ஒவ்வொருநாளும் இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்து கொண்டிருக்கின்றோம். அறம் சார்ந்த சமூகத்தையும், அர்த்தங்கள் நிறைந்த சமூகத்தையும் உருவாக்க வேண்டும் என்பதே நம்முடைய எண்ணம். இதன் வழியாக நம்முடைய எண்ணங்களும் சிந்தனைகளும் மாறுபட்டு நம்முடைய செயலில் நம்மால் உறுதியாக செயல்பட முடியும். வாழ்வில் சில விஷயங்கள் எவ்வளவு விரைவாக செய்கிறோம் என்பது முக்கியமல்ல எவ்வளவு விரைவாக செய்கின்றோம் என்பதே முக்கியம். சிற்பிகள் IAS அகாடெமியின் ஓட்டம் மிக வேகமானது அல்ல மிக நீண்ட தூரமானது.
ஒவ்வொருவரின் வாழ்விலும் மாற்றமும், ஏற்றமும் காணப்பட வேண்டும் என்பதே சிற்பிகள் IAS அகாடெமியின் முக்கிய நோக்கம். நம்முடைய பாதையில் இருக்கும் வாய்ப்புகளை நாம் சரியாக பயன்படுத்தி நம்மை சார்ந்தவர்களுக்கு அதை அடையாளப்படுத்த வேண்டும் என்பதே நம்முடைய ஒவ்வொருவரின் முக்கியமான நோக்கமாக இருக்க வேண்டும். படிப்பது என்பது சுகமானது, மகிழ்ச்சியானது என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொண்டால் நாம் எடுக்கும் இலட்சியப் பாதையில் நம்மால் எளிமையாக வெல்ல முடியும் என்பதை தான் நாங்கள் ஒவ்வொரு மாணவர்களுடன் மனதிலும் விதைக்க விரும்புகின்றோம்.
நாம் படிக்கும் படிப்பு நமக்கும், நம் சமூகத்திற்கும் பயன்படவில்லை என்றால் நாம் படிக்கும் படிப்பால் எந்தவிதமான அர்த்தங்களும் இல்லாமல் போகும். ஆரோக்கியமான மாணவ மாணவிகளையும் மிகச்சிறந்த அதிகாரிகளையும் உருவாக்க வேண்டும் என்பதே சிற்பிகள் IAS அகாடெமியின் தலையாய நோக்கம்.
வெற்றி என்பது திடீர் நிகழ்வு அல்ல. அடக்கமுடியாத ஆசையாலும், தீவிரமான உழைப்பாலும், சரியான செயல்பட்டாலும் அதில் கிடைக்கும் என்பது கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் அவர்களின் பொன்மொழிகள். சிறந்த இலட்சியத்தில் பயணிக்கும் ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கும் சிற்பிகள் IAS அகாடெமியின் வாழ்த்துக்களும், நன்றிகளும். நம்முடைய இலட்சியத்தில் நாம் தெளிவாகவும், உறுதியாகவும் செயல்பட்டால் நாம் நினைக்கும் வெற்றியை நம்மால் எட்ட முடியும்.
Sirpigal IAS Academy, One of the Best institute for E- Learning. Its mainly for UPSC and TNPSC aspirants. We all have certain dream in our life. some have a dream to Become a Doctor, Engineer, Lawyer, Teacher and etc. If you have a Dream to become and administrator like IAS., IPS., IRS., we are here to show you the way to Know about it and achieve it. Idea and Guidelines are two important thing in our life. If you have an Idea about your Life, we are here to serve you! Lets live for what we what…!Life will become most beautiful when we live for what we love!